Thursday, September 13, 2007

உன் ஞாபகம்

மண்டையை பிளக்கும் வெய்யில்
கவலையற்ற நடைபாதை மக்கள்

மாநகர வாகன நெரிசல்
கரும்புகை கக்கும் கனரக ஊர்திகள்

மலைபிரதேசமெனும் சாலை
நொடிக்கொரு திருப்பம்

அழுக்கேரிய மனதில் வெள்ளாடை
ஆங்காங்கே அழுவதற்கு சில்லரை கொஞ்சம்

உள்ளாடை காட்டும் நாகரீக கூட்டம்
உடனிருக்க கூலிகேட்கும் மற்றொரு கூட்டம்

தாகம் தீர்க்க உயிரைக்குடிக்கும்
தண்ணீர் வண்டிகள்

கடன் கேட்டு இல்லையென்றால்
தூற்றிப்பேசும் நண்பர்கள்

கஷ்டம் என்றால் ஓடி மறையும்
சுற்றம்

கண்ணயர்கையில்
கதவுடைக்கும் களவாடிகள்

தெருமுனை ரேஷன் கடை
எறும்புகளாய் சிலர்

சாக்கடையோர குடிசைகள்
சலனமில்லா சிறுவர்களின் விளையாட்டு

எப்போதாவது நடக்கும்
வைபவங்கள்

.......இன்னும்.......

இன்னும் எத்தனை எத்தனையோ...
வாழ்க்கையை வளைத்து கேள்வியாக்கும்

அப்போதும்...
கண்ணே உன் ஞாபகமடி...
காதல்கொண்ட என் நெஞ்சமெங்கும்!

தோற்றமும் மறைவும் தொடர்பற்று
வாழ்கை...
வீசும் காற்றில் ஓர் வெற்று காகிதமாய்


விரக்தியில் விழி பிதுங்கும்
இறப்பது எளிதெனப்படும்

இருப்பினும்...
நமக்காக அன்றியேனும்
நம் காதலுக்காக
உயிர் வாழ்வேன்!

No comments: