சந்திக்க நேர்கையில்
ஏதேனும் ஒரு காரணம் -
நீ அழுவதற்காக
புரிகிறது!
என் மார்பில் முகம்புதைத்து
அழுவதுன் சுகமென்று!
இருப்பினும்
இருவருக்கும் இடையில் என்ன உறவு?
புரிந்தபாடில்லை
அழைக்கும்போது ஓடிவரும் நீ
அழைப்பதற்காக காத்திருக்கும் நான்
எதைத்தேடி இணைகிறோம்?
தேடித்தேடி தீர்ந்துபோகும்
நீயும் நானும்
பிரிவதாக ஒப்பந்தம்
நாடகமாய் அறங்கேறும்!
மீண்டும் தேடுதலில் மூழ்கிப்போவோம்!
இறுதியில்
வெறுமையாய் ஒரு பார்வை வீசி - என்னை
அடுத்த சந்திப்பிற்க்கு ஆயத்தப்படுத்துகிறாய்
Tuesday, September 11, 2007
மீண்டும்
Posted by
J
at
6:35 AM
 
 
Subscribe to:
Post Comments (Atom)
 
 Posts
Posts
 
 
2 comments:
மச்சி ரொம்ப உணர்வுபூர்வமா இருக்கு.!!
மீண்டும் மீண்டும் ....
நீ எழுத வேண்டுமடா...!!
and take care of some small mistake in ர் and ற்
Post a Comment