Tuesday, September 11, 2007

கருவி

உருகியதுன் சிரிப்பில்-
என் இதயம்!
உன் அதர வெடிப்புகளில்
கசிந்து
பின் மறைந்து
பாவையில் பார்வையாகிறேன்
மிரட்சியாயிருக்கிறது-
எனை நானே
நோக்குவது!

வாடை தாங்காமல்
வயதையும் மீறி
புதிதாய் பிறக்கிறோம்-
ஓர் போர்வைக்குள்!
அச்சமும் நாணமும்
அகன்று விட துடிக்கும்
ஏகாந்த வேளையில்
பயத்தோடு ஓர் தழுவல்-
முழுவதும் பற்றிய தீயாய்

நினைவுகள் நிலையற்றுப் போகும் -உன்
நிழல் மட்டும் எனைத் தொட்டுப்பேசும்
வேட்கை எனை ஆட்கொள்ள
விருந்தல்லவா நீ என்றால்
காமம் தலைக்கேறி
காதல் கரிக்கும்!
யுத்தம் தொடங்கும்

உனக்கும் உனக்குமான யுத்தத்தில்
கருவியாய் நான்!
விட்டுவிடு என்பதுவும்
விடாமல் இறுக்கிக்கொல்வதுவும் நீயே!
முரண்பாடுகள் முற்றிப்போக
முழுவதுமாய் தோற்றுப்போவாய் நீ!
முகமற்று நான்!
இழந்தோமா...?! பெற்றோமா...?!
புரியாமல்
குறுநகையுதிர்க்கும்
நம் உதடுகள்...

1 comment:

seenu said...

கருப்பு...!!
உன் கவிதை ஊற்று வெள்ளமாகட்டும்.

மிக அருமை.