அற்புதமாய் சில நேரங்களில்
காதலுடன் ஒரு பார்வை என்னை கடந்து போகும்...
நீ என்றால் நினைவில் ஓர் நிறமாலை வந்து போகும்....
உன் ஒவ்வொரு கூந்தலும் என் உயிர் தாங்கும்
சிரம் பிரியும் சில கூந்தல் இழைகள்...
என் உயிர் குறையும் அந்நாட்களில்...
நீ கண்களை மூடித்திறக்கும் தருணங்களில் -
கருவிழி மறைந்து போகும் இமைகளுக்கிடையில்...
இறந்து பிறக்கிறேன் நான்.
என் எதிரே நீ இருந்தால் என் மௌனம் கலைக்காதே
வெற்று வார்த்தைகளால் என் காதல் விளங்காது...
காதலாய் கரைந்திருப்பேன் - மௌன வேளைகளில்.
என்றேனும் ஓர் நாள் இது நேரிடும் -
அப்போது...
செத்து மடிந்த என் சிதிலம் சேர்த்து
உயிர்ப்பித்து பார் - என்னை மீண்டும் ஒருமுறை...
என் காதல் புரியும்!!!
Tuesday, September 11, 2007
காதலாய் நான்...!
Posted by
J
at
3:30 AM
 
 
Subscribe to:
Post Comments (Atom)
 
 Posts
Posts
 
 
No comments:
Post a Comment